மணி மணி மாமணி கலைமாமணி! மொத்தம் 71 மணி!

பிப்ரவரி 24, 2009

லைமாமணி ஐஸ்வர்யா தனுஷ்!

லைமாமணி வையாபுரி! 

 கலைமாமணி தேவிப்ரியா!

லைமாமணி மீண்டும் மீண்டும் சிரிப்பு ஷோபனா

மற்றும் கலைமாமணி பலர்!

நேற்று ஏ.ஆர்.ரகுமானுக்கு இரு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த செய்தி அறிந்து மகிழ்ந்தோம். அந்த மகிழ்ச்சியைப் பன்மடங்கு பூரிப்பாக்கும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ், வையாபுரி, தேவிப்ரியா உள்பட 71 பேருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. இவ்விருதுகள் விரைவில் 6 மணி நேர விழாவில் நட்சத்திர நடனங்களோடு கோலாகலமாக வழங்கப்படும் என தெரிகிறது. காத்திருங்கள்.

விருதுபெறும் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்!

1. அ.மாதவன்-இயற்றமிழ்க் கவிஞர்
2. கவிஞர் சிற்பி-இயற்றமிழ்க் கவிஞர்
3. டாக்டர் சரளா ராஜகோபாலன்
இயற்றமிழ் ஆராய்ச்சியாளர்
4. குருசாமி தேசிகர்
இயற்கலை பண்பாட்டு கலைஞர்
5. அவ்வை நடராஜன்-இலக்கிகியப் பேச்சாளர்
6. மாசிலாமணி (கன்னியாகுமரி)இலக்கியப் பேச்சாளர்
7. சீர்காழி எஸ்.ஜெயராமன்-இசை ஆசிரியர்
8. எம்.எஸ்.முத்தப்பா (நாகர்கோவில்)- இசை ஆசிரியர்
9. மகாராஜபுரம் சீனிவாசன்-குரலிசை
10. ஏ.வி.எஸ்.சிவகுமார்-குரலிசை
11. எம்பார் கண்ணன்-வயலின்
12. வழுவூர் ரவி மிருதங்கம்
13. டிரம்ஸ் சிவமணி-  டிரம்ஸ்
14. சுகி சிவம்-சமய சொற்பொழிவாளர்
15. சதாசிவன் (நாகர்கோவில்)-இறையருட் பாடகர்
16. வீரமணி ராஜூஇறையருட் பாடகர்
17. டி.வி.ராஜகோபால் பிள்ளை-நாதசுர கலைஞர்
18. எஸ்.வி.மீனாட்சி சுந்தரம் (லால்குடி)
 நாதசுர கலைஞர்
19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்
 தவில் கலைஞர்
20. ஏ.மணிகண்டன் (சேந்தமங்கலம்)
 தவில் கலைஞர்
21. செல்வி ஷைலஜா
 பரத நாட்டியம்
22. செல்வி ஸ்வேதா கோபாலன்
 பரதநாட்டியம்
24. செல்வி கயல்விழி கபிலன்
பரதநாட்டியம்
25. ஜஸ்வர்யா ரஜினிகாந்த்
பரதநாட்டியம்
26. வசந்தா வைகுந்த்
நாட்டிய நாடகம்
27. மு.ராமசாமி
நாடக ஆசிரியர்
28. கூத்துப்பட்டறை முத்துசாமி
 -நாடக தயாரிப்பாளர்
29. ராஜாமணி
நாடக நடிகை
30. சி.டேவிட்
 இசை நாடக மிருதங்க கலைஞர்
31. புதுக்கோட்டை ச.அர்ச்சுனன்
நாடக ஆர்மோனிய கலைஞர்
32. விழுப்புரம் விசுவநாதன்
தெருக்கூத்து
33. சங்கர பாண்டியன்
காவடியாட்டம்
34. வேலவன் சங்கீதா
வில்லுப்பாட்டு
35. பெ.கைலாசமூர்த்தி (தூத்துக்குடி)
ஒயிலாட்டம்
36. துறையூர் முத்துக்குமார்
காளியாட்டம்
37. அபிராமி ராமநாதன்
திரைப்பட தயாரிப்பாளர்
38. சேரன்
திரைப்பட இயக்குனர்
39. சுந்தர்.சி
நடிகர்
40. பரத்
நடிகர்
41. நயன்தாரா
நடிகை
42. அசின்
நடிகை
43. மீரா ஜாஸ்மின்
 நடிகை
44. பசுபதி
குணசித்திர நடிகர்
45. ஷோபனா
குணசித்திர நடிகை
46. வையாபுரி
நகைச்சுவை நடிகர்
47. சரோஜாதேவி
பழம்பெரும் நடிகை
48. வேதம்புதிது கண்ணன்
 வசனகர்த்தா
49. ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைப்பாளர்
50. ஆர்.டி.ராஜசேகர்
ஒளிப்பதிவாளர்
51. பி.கிருஷ்ணமூர்த்தி
கலை இயக்குனர்
52. சித்ரா சுவாமிநாதன்
புகைப்பட கலைஞர்
53. நவீனன்
பத்திரிகையாளர்
54. சீனிவாசன்
ஓவிய கலைஞர்
55. சுந்தர்.கே.விஜயன்
சின்னத்திரை இயக்குனர்
56. திருச்செல்வம்
சின்னத்திரை இயக்குனர்
57. பாஸ்கர் சக்தி
வசனகர்த்தா
58. அபிஷேக்
சின்னத்திரை நடிகர்
59. அனுஹாசன்
சின்னத்திரை நடிகை
60. அமர சிகாமணி
சின்னத்திரை குணசித்திர
61. எம்.எம்.ரங்கசாமி
சின்னத்திரை ஒளிப்பதிவாளர்
62. தேவிப்பிரியா
சின்னத்திரை நடிகை
63. ரமேஷ் பிரபா
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்
64. வி.தாயன்பன்
இசைக் கலைஞர்
65. டாக்டர் அ.மறைமலையான்
இயற்றமிழ் கலைஞர்
66. ஜாகிர் உசேன்
பரத நாட்டிய கலைஞர்
67. சரோஜ் நாராயணசுவாமி
இயற்றமிழ்க் கலைஞர்
68. ஆண்டாள் பிரியதர்ஷினி
இயற்றமிழ்க் கலைஞர்
69. அரிமா கோ.மணிலால்
இயற்றமிழ்க் கலைஞர்
70. பெரு மதியழகன்
இயற்றமிழ்க் கலைஞர்
71. ஒய் ஜான்சன்
நாடக கலைஞர்
சிறந்த கலை நிறுவனம்
தமிழிசை மன்றம், திருவையாறு.
சிறந்த நாடகக் குழு
சாம்புவின் ஸ்ரீ சங்கர நாராயண சபா, ஆடுதுறை.
பொற்கிழி பெறுவோர்
1. என்.எஸ்.வரதராசன் (மதுரை)இசை நாடகப் பாடலாசிரியர்
2. டி.சி.சுந்தரமூர்த்தி (சென்னை) புரவியாட்ட கலைஞர்
3. டி.என்.கிருஷ்ணன் (சென்னை)  நாடக நடிகர்

கலைமாமணி ஐஸ்வர்யா தனுஷ்!

பிப்ரவரி 24, 2009

 கலைமாமணி வையாபுரி!  கலைமாமணி தேவிப்ரியா!

நேற்று ஏ.ஆர்.ரகுமானுக்கு இரு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த செய்தி அறிந்து மகிழ்ந்தோம். அந்த மகிழ்ச்சியைப் பன்மடங்கு பூரிப்பாக்கும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ், வையாபுரி, தேவிப்ரியா உள்பட 71 பேருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. இவ்விருதுகள் விரைவில் 6 மணி நேர விழாவில் நட்சத்திர நடனங்களோடு கோலாகலமாக வழங்கப்படும் என தெரிகிறது. காத்திருங்கள்.

விருதுபெறும் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்!

1. அ.மாதவன்-இயற்றமிழ்க் கவிஞர்
2. கவிஞர் சிற்பி-இயற்றமிழ்க் கவிஞர்
3. டாக்டர் சரளா ராஜகோபாலன்
இயற்றமிழ் ஆராய்ச்சியாளர்
4. குருசாமி தேசிகர்
இயற்கலை பண்பாட்டு கலைஞர்
5. அவ்வை நடராஜன்-இலக்கிகியப் பேச்சாளர்
6. மாசிலாமணி (கன்னியாகுமரி)இலக்கியப் பேச்சாளர்
7. சீர்காழி எஸ்.ஜெயராமன்-இசை ஆசிரியர்
8. எம்.எஸ்.முத்தப்பா (நாகர்கோவில்)- இசை ஆசிரியர்
9. மகாராஜபுரம் சீனிவாசன்-குரலிசை
10. ஏ.வி.எஸ்.சிவகுமார்-குரலிசை
11. எம்பார் கண்ணன்-வயலின்
12. வழுவூர் ரவி மிருதங்கம்
13. டிரம்ஸ் சிவமணி-  டிரம்ஸ்
14. சுகி சிவம்-சமய சொற்பொழிவாளர்
15. சதாசிவன் (நாகர்கோவில்)-இறையருட் பாடகர்
16. வீரமணி ராஜூஇறையருட் பாடகர்
17. டி.வி.ராஜகோபால் பிள்ளை-நாதசுர கலைஞர்
18. எஸ்.வி.மீனாட்சி சுந்தரம் (லால்குடி)
 நாதசுர கலைஞர்
19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன்
 தவில் கலைஞர்
20. ஏ.மணிகண்டன் (சேந்தமங்கலம்)
 தவில் கலைஞர்
21. செல்வி ஷைலஜா
 பரத நாட்டியம்
22. செல்வி ஸ்வேதா கோபாலன்
 பரதநாட்டியம்
24. செல்வி கயல்விழி கபிலன்
பரதநாட்டியம்
25. ஜஸ்வர்யா ரஜினிகாந்த்
பரதநாட்டியம்
26. வசந்தா வைகுந்த்
நாட்டிய நாடகம்
27. மு.ராமசாமி
நாடக ஆசிரியர்
28. கூத்துப்பட்டறை முத்துசாமி
 -நாடக தயாரிப்பாளர்
29. ராஜாமணி
நாடக நடிகை
30. சி.டேவிட்
 இசை நாடக மிருதங்க கலைஞர்
31. புதுக்கோட்டை ச.அர்ச்சுனன்
நாடக ஆர்மோனிய கலைஞர்
32. விழுப்புரம் விசுவநாதன்
தெருக்கூத்து
33. சங்கர பாண்டியன்
காவடியாட்டம்
34. வேலவன் சங்கீதா
வில்லுப்பாட்டு
35. பெ.கைலாசமூர்த்தி (தூத்துக்குடி)
ஒயிலாட்டம்
36. துறையூர் முத்துக்குமார்
காளியாட்டம்
37. அபிராமி ராமநாதன்
திரைப்பட தயாரிப்பாளர்
38. சேரன்
திரைப்பட இயக்குனர்
39. சுந்தர்.சி
நடிகர்
40. பரத்
நடிகர்
41. நயன்தாரா
நடிகை
42. அசின்
நடிகை
43. மீரா ஜாஸ்மின்
 நடிகை
44. பசுபதி
குணசித்திர நடிகர்
45. ஷோபனா
குணசித்திர நடிகை
46. வையாபுரி
நகைச்சுவை நடிகர்
47. சரோஜாதேவி
பழம்பெரும் நடிகை
48. வேதம்புதிது கண்ணன்
 வசனகர்த்தா
49. ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைப்பாளர்
50. ஆர்.டி.ராஜசேகர்
ஒளிப்பதிவாளர்
51. பி.கிருஷ்ணமூர்த்தி
கலை இயக்குனர்
52. சித்ரா சுவாமிநாதன்
புகைப்பட கலைஞர்
53. நவீனன்
பத்திரிகையாளர்
54. சீனிவாசன்
ஓவிய கலைஞர்
55. சுந்தர்.கே.விஜயன்
சின்னத்திரை இயக்குனர்
56. திருச்செல்வம்
சின்னத்திரை இயக்குனர்
57. பாஸ்கர் சக்தி
வசனகர்த்தா
58. அபிஷேக்
சின்னத்திரை நடிகர்
59. அனுஹாசன்
சின்னத்திரை நடிகை
60. அமர சிகாமணி
சின்னத்திரை குணசித்திர
61. எம்.எம்.ரங்கசாமி
சின்னத்திரை ஒளிப்பதிவாளர்
62. தேவிப்பிரியா
சின்னத்திரை நடிகை
63. ரமேஷ் பிரபா
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்
64. வி.தாயன்பன்
இசைக் கலைஞர்
65. டாக்டர் அ.மறைமலையான்
இயற்றமிழ் கலைஞர்
66. ஜாகிர் உசேன்
பரத நாட்டிய கலைஞர்
67. சரோஜ் நாராயணசுவாமி
இயற்றமிழ்க் கலைஞர்
68. ஆண்டாள் பிரியதர்ஷினி
இயற்றமிழ்க் கலைஞர்
69. அரிமா கோ.மணிலால்
இயற்றமிழ்க் கலைஞர்
70. பெரு மதியழகன்
இயற்றமிழ்க் கலைஞர்
71. ஒய் ஜான்சன்
நாடக கலைஞர்
சிறந்த கலை நிறுவனம்
தமிழிசை மன்றம், திருவையாறு.
சிறந்த நாடகக் குழு
சாம்புவின் ஸ்ரீ சங்கர நாராயண சபா, ஆடுதுறை.
பொற்கிழி பெறுவோர்
1. என்.எஸ்.வரதராசன் (மதுரை)இசை நாடகப் பாடலாசிரியர்
2. டி.சி.சுந்தரமூர்த்தி (சென்னை) புரவியாட்ட கலைஞர்
3. டி.என்.கிருஷ்ணன் (சென்னை)  நாடக நடிகர்

விலை பேசப்பட்ட மரணம்!

பிப்ரவரி 23, 2009

22 பிப்ரவரி 2009

ஜேட் கூடிக்கு இன்று கல்யாணம். நினைவிருக்கிறதாஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பிக் பிரதர்ரியாலிட்டி ஷோவில் நடிகை ஷில்பா ஷெட்டியோடு போட்டியிட்டு இனவெறி வார்த்தைகளை உதிர்த்து சர்ச்சைக்குள்ளானரேஅதே பெண்தான்!

ஜேட் இப்போதைய ஆண் நண்பர் ஜாக் டுவிட்டிடம் (வயது 21) தன்னை மணமுடிக்க வேண்டியிருக்கிறார். அவரும் ஒப்புக்கொண்டு விட்டார். அப்புறமென்னகை குலுக்கி வாழ்த்திவிட்டு ஒயின் அருந்தி மகிழ்ந்துவிட்டு போக வேண்டியதுதானே என்கிறீர்களா? ம்ம்வேறு யாரோ யாரையோ திருமணம் செய்துகொண்டால் அப்படித்தான் நடக்கும். ஜேட் விஷயத்திலோ எல்லாமே வேறுவிதம்.

ஜேட் இப்போது செத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மெல்ல மெல்ல. அதிர்ச்சியளிக்கும் வாசகமாக இருந்தாலும், மருத்துவரீதியாக அறிவிக்கப்பட்ட உண்மை இது.

பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்தியத் தயாரிப்பானபிக் பாஸ்ஷோவுக்கு ஷில்பா ஷெட்டியோடு ஜேட் கூடியும் அழைக்கப்பட்டார். கேமரா முன்தான் அவருக்குச் சொல்லப்பட்டது… ‘உங்களுக்கு செர்விக்கல் கேன்சர்!’ என்று. அதில் எந்த ட்ரிக்கும் இல்லை. உண்மையிலேயே அவருக்கு கருப்பைவாய் புற்றுநோய். அதைத்தான் அவரது டாக்டர் உறுதிப்படுத்தினார் அன்று.

இங்கிலாந்து திரும்பினார் ஜேட். அங்கே அவரது குழந்தைகள் காத்திருந்தனர். தான் சில மாதங்களில் இறக்கும் நிலையில் இருப்பதாக அவரே எல்லோருக்கும் செய்தி கொடுத்தார். டிவியில் ஜேடி பற்றிய டாக்குமென்டரி படம் ஒளிபரப்பானது. இப்படி மீடியாவுக்கு பிரமாதமான ஒத்துழைப்பு கொடுத்தார் ஜேட்ஏன் தொடர்ந்து மீடியாவை தன் விஷயத்தில் ஊக்கப்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம்.

திருமணம் செய்வதன் மூலம் இன்னும் நிறைய புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள் அவரைச் சுற்றிச் சுழன்றடிக்கப் போகின்றன. ஆனால், அவற்றுக்கு அவர் பணம் பெற்றிருக்கிறார்! சுமார் 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு அவரது திருமண நிகழ்ச்சி படப்பிடிப்பு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. தான் இறந்த பிறகு தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அந்தப் பணம் தேவை என்கிறார் அவர்.

டிவி ஸ்டார் என்ற நிலையிலிருந்த ஜேட் கூடி இன்று பிசினஸ் பெண்மணி. தன் மரணத்தையே காட்சியாக்கி விற்றுக்கொண்டிருப்பதுதான் அவரது தொழில்என்று ஒரு பக்கம் அவரைக் கடுமையாகச் சாடுகிறார்கள். இன்னொரு பக்கம்… ‘அய்யோ பாவம்ஷில்பா ஷெட்டியிடம் தவறாக நடந்து கொண்டதற்குக் கூட எத்தனை முறை மன்னிப்பு கேட்டார். மகன்களை வாழ வைக்க இப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறதேஎன்று நெஞ்சைப் பிழிகிறார்கள் சிலர். இரண்டு கருத்துகளுமே சரிதானோ எனத் தோன்றினாலும், மேற்கத்திய மீடியாக்கள் இந்த 27 வயதுப் பெண்ணின் உயிர் பிரிந்து கொண்டிருப்பதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக காட்டுகிறார்கள்.

ஜேட் கூடிதான் பணத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்றால், அதை விலை கொடுத்து வாங்கி வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? ரியாலிட்டி ஷோக்களின் உச்சக்கட்ட கொடூரம் இது. மரணத்தையும் ரசிக்கும்படி தந்து மக்களின் மனநிலையையே இவர்கள் மாற்றியமைக்கிறார்கள் என மீடியாக்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

ஜேட் தன் திருமணத்துக்கு ஷில்பாவையும் அழைத்திருக்கிறார். ‘நான் இப்போது படப்பிடிப்பில் இருக்கிறேன். லண்டனில் இருந்தால் நிச்சயம் சென்று வாழ்த்தியிருப்பேன். நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். பழையது எதையும் மனதில் சுமந்து கொண்டிருக்க வில்லை. இப்போது ஜேட் மீது எனக்கு அன்பு பீறிடுகிறது. அவரது திருமணத்தை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. உடல்நிலையை நினைத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று துக்கமாக இருக்கிறது. 5 வயதிலும் 4 வயதிலும் அவருக்கு குட்டிப் பையன்கள் இருக்கிறார்கள். ஜேட் கூடிக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள். அதனால் ஏதாவது அற்புதம் நிகழலாம், ப்ளீஸ்என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

மரணத்தை விலை பேசி விற்றிருப்பது அவரது தனிப்பட்ட உரிமை. அவருக்கு சரியெனப் பட்டதை அவரது குழந்தைகளுக்காக செய்திருக்கிறார். இதனால் அந்தக் குழந்தைகளுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கிறதேஇதெல்லாம் தவறு என சொல்வதற்கு நாம் யார்என்று கேட்கிறார் ஷில்பா.

கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்பார்களேஅப்படி கடந்த சில வாரங்களில் செர்விக்கல் கேன்சர் இருக்கிறதா என பரிசோதித்துக்கொள்கிற பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறதாம். ஜேட் கூடிக்கு நன்றி!

மன்னர் காலங்களில் மக்கள் பார்வையிடும் வகையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இன்று இணைய வீடியோக்களில் விலங்குகள் இறக்கும் காட்சிகளை அச்சு அசலாகக் காண முடியும். ஆனால், மரண நாளை முன்கூட்டியே அறிந்துகொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை அப்படியே நம் வீட்டுக்கே வருவது இதுவே முதல்முறை. இதுவே கடைசி முறையாகவும் இருக்கட்டும்.

(நன்றி: தினகரன்)

புத்தர் அழுகிறார்!

பிப்ரவரி 10, 2009

1.

நம்புங்கள்

இலங்கைக்கு உள்ளேயே ஒரு சோமாலியா உருவாகிக் கொண்டிருக்கிறது. ‘எந்த நொடியில் சிங்கள ராணுவம் குண்டு வீசும்பிள்ளைகளின் உயிர் போகும்என்ற எல்லையில்லா பதற்றத்துக்கு நடுவே, பசியின் கொடுமையையும் அனுபவிக்கிறார்கள் தமிழ் மக்கள். பதுங்கு குழிகளைக்கூட இழந்து காட்டுக்கு உள்ளேயும் சாலையோரமும் உயிரை ஏதோ ஒரு நம்பிக்கையில் பிடித்து வைத்திருக்கிற இம்மக்களுக்கு உணவோ, மருத்துவ & சுகாதார வசதிகளோ கிடையவே கிடையாது. செஞ்சிலுவை சங்கம் போன்ற சேவை அமைப்புகளும் சிங்கள ராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின், புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ் நாட்டினரும் அனுப்புகிற உதவியும் மக்களுக்குப் போய் சேருவதில்லை.

அண்மையில் இலங்கையில் தமிழ் மக்கள் உயிரோடு இருக்கிற பகுதிகளுக்குச் சென்று வந்த உலக உணவுத் திட்ட அதிகாரி ஜான் கேம்ப்பெல் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். ‘‘18 ஆண்டுகள் முன் நான் சோமாலியாவில் கண்டதையே இலங்கைத் தமிழர் மத்தியிலும் கண்டேன். உணவில்லைஉதவியில்லைஉதவ வருவோரையும் விடுவதில்லை. ‘டைம்பத்திரிகையின் சிறந்த புகைப்படமாக பிரசுரமாகும் வறுமைப் படங்களை எடுக்க இனி சோமாலியா போக வேண்டியதில்லை. இந்தத் தமிழர்களை படம் பிடித்தாலே இன்னும் கொடுமையாக இருக்கும்’’ என்றிருக்கிறார் அவர்.

மழையோ வெயிலோ புயலோ சுனாமியோ பொங்கலோ புத்தபூர்ணிமாவோநாளும் பொழுதும் பொருட்டில்லை என சிங்கள ராணுவத்தால் வீசப்படும் குண்டுகள் அப்பாவி தமிழ் மக்களையே கொத்துக் கொத்தாக புதைக்குழிக்குள் அனுப்புகின்றன. 28 ஆயிரத்துக்கும் அதிக தமிழ் மக்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

புலிகளை அழித்து நாட்டை செழிப்பாக்குவோம் என பக்சே சகோதரர்களாலும், சரத்பொன்சோகாவிலும் நடத்தப்படும் இந்த எகத்தாள யுத்தத்தில் தமிழர்களின் உயிர்கள் தினம்தோறும் மடிகின்றன. வாழ்ந்த நிலத்தை விட்டு அரைகுறை உயிரோடு இடம்பெயரும் அவலத்தினருக்கோ உணவே பெரும் பிரச்னையாகி இருக்கிறது.

கிளிநொச்சியையும் ஆனையிறவையும் கைவிட்ட புலிகள் இப்போது ராணுவ முறையிலிருந்து விலகி மீண்டும் கெரில்லா போராளிக்குழுவாக மாறியிருக்கின்றனர். புலிகளை நினைத்த அளவு எளிதாக அப்புறப்படுத்த முடியாத அவதியில் மக்கள் மீதே ஆத்திரம் காட்டுகின்றனர் ராணுவத்தினர். தமிழர்களுக்காக தமிழர்கள் அனுப்புகிற நிவாரணப்பொருட்களை எல்லாம் – மருந்துகள் உள்பட –  சிங்கள ராணுவத்தினரே கொள்ளையடிக்கின்றனர்

2.

 

உலகெங்கும் பொருளாதார மந்தம் ஏற்பட்டிருக்கும் சூழலில் இலங்கையும் விதிவிலக்கல்ல. ஆனால், இலங்கையில் அண்மைக்காலமாக தறிகெட்டு விலைவாசி உயர்வு ஏற்பட்டிருப்பதற்கு ராஜபக்ஷே & சரத்பொன்சேகா கூட்டணியின் ராணுவ வெறியே காரணம். புலிகளோடு சேர்த்து தமிழர்களையும் அளித்தே தீர்வது என கங்கணம் கட்டி செயல்படும் ராஜபக்ஷே அரசு மக்கள் பணத்தின் பெரும் பகுதியை மட்டுமல்லாது, கடன் வாங்கியும் ராணுவத்துக்காகவே செலவிடுகிறது. எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை விவரிக்க நடத்தும்தேசத்திற்கு மகுடம்கண்காட்சியில் கூட ராணுவத் தளவாடங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அரசியலும் போரும் அறியாத மிக இளம் வயதினர்அதிக சம்பளம்என்ற பேராசை காட்டப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். ‘புலிகளோடு போரிட வேண்டியதில்லைகொழும்பிலேயே இருக்கலாம்என்று பொய் சொல்லி சேர்க்கப்பட்ட இளைஞர்கள் கூட இன்று சிங்கள ராணுவத்தில் அலைபாய்கின்றனர்.

இப்புத்தாண்டில் தமிழரோடு சேர்த்து சிங்களரும் விலைவாசி உச்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கிற தமிழ் மக்களோ அரிசியோ, மீனோ, காய்கறிகளோ எதிர்பார்க்கவில்லை. அடுத்த குண்டு விழுவதற்குள் இடம்பெயர துளியளவு சக்தி தரும் ஒரு பிடி உணவு, குழந்தைக்குச் சிறிது பால்ஆனால், இதுகூட கிடைக்க விடாமல் லட்சக்கணக்கான மக்கள் மடியும் வகையில் ஒரு சோமாலியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ராணுவம்

3.

 

யுத்த கொடூரங்களுக்கு மத்தியில் வரலாற்றைத் திரிபுபடுத்தும் முயற்சிகள் தென்னிலங்கையில் தீவிரம் பெற்றிருக்கின்றன. அண்மையில் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை விவாதத்தின்போது பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர், ‘கிளிநொச்சியில் அதிகளவில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கிறதுஎனக் கூறியிருக்கிறார். 1500 பௌத்த விகாரைகளும், சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1500 குளங்களும் அங்கு இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார் அவர்.

அதுமட்டுமன்றி ஈச்சிலம்பற்று உள்பட கிழக்கின் பல பகுதிகளையும் பௌத்த சிங்கள பாரம்பரிய பிரதேசமாக உரிமை கோரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு புதிய வரலாற்றுக் கதைகள் புனையப்படுகின்றன. கிழக்கு கைப்பற்றப்பட்ட பின்னர் இவ்வாறு பல இடங்களில் புதிதாக பௌத்த விகாரைகள், பௌத்த சின்னங்கள் அமைக்கப்பட்டு ராணுவ வெற்றியை உறுதிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதைவிட பல பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டு அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கில் இருந்து இப்போது இந்த முயற்சிகள் வடக்கை நோக்கியும் திருப்பி விடப்பட்டிருக்கிறது.

கிளிநொச்சியை சிங்களவர்களின் பாரம்பரிய தாயகமாக உரிமை கோரும் முயற்சியாகவே அங்கு 1500 விகாரைகள், குளங்கள் என்று கதை கட்டப்படுகிறது.

போரில் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை கைப்பற்றும்போது சிலருக்கு இதெல்லாம் பாரம்பரிய சிங்களப் பிரதேசமாக இருந்திருக்கக் கூடாதா என்ற ஆசை வந்து விடுகிறது. சிங்கள வரலாற்றாசியர்களைத் தூண்டிவிட்டு தமிழ்மக்கள் வாழ்ந்த பிரதேசங்களை சிங்களப் பகுதிகள் என்று உரிமை கோருவதும் சிங்களப் பெயர்கள் சூட்டி மகிழ்வதும் வழக்கமாகி விட்டது.

அரசாங்கம் மிக மகிழ்ச்சியோடு சிங்கள வரலாற்றுப் புனைகதைகளுக்குத் துணைபோகிறது. இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இலங்கையில் தமிழ்மக்களின் வரலாற்று அடிச்சுவடே இருக்கக் கூடாது என்பதிலும் அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்கள் உரிமை கோரக் கூடாது என்பதிலும் சிங்களர் சிலர் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். ஆனால், தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தையும் வாழ்வுரிமையை நிராகரித்து ஒற்றையாட்சி அரசை ஒருபோதும் உறுதியாக வைத்திருக்க முடியாது.

எனினும், இலங்கை தமிழ்மக்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக நிருபிக்கவும், இப்போதைய வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து, நிராகரிக்கின்ற வகையிலும் ஆதாரங்களை ஆவணப்படுத்த தமிழ் வரலாற்றாசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையெனில் இலங்கை தமிழ்மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்களே என்று பதியப்பட்டாலும் வியப்பதற்கில்லை.

ராஜபக்‌ஷே – பிரணாப் முகர்ஜி சந்திப்பு ரகசியம் அம்பலம்!

பிப்ரவரி 9, 2009

போர் நிறுத்தம் மூலம் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே உடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை அம்ப்லமாகியுள்ளது.
பிரணாப்: தமிழ்நாட்டுல ஒரே தொல்லையா இருக்குய்யா… நீர் சட்டுபுட்டுனு புலிகளையும் தமிழர்களையும் காலி பண்ணிட்டு வியாபார ஒப்பந்தத்துக்கு வருவீருனு பார்த்தா, இழுத்தடிக்கிறீரே…
ராஜபக்‌ஷே: நாங்களும் போராடித்தான் பார்க்கறோம். புலிப்பசங்க வலுவா இருக்காங்க… தமிழர்கள் எங்க பக்கம் வந்தாலாவது, அவங்களையாவது குண்டு போட்டு குளோஸ் பண்ணலாம். அவங்களும் காட்டுக்குள்ளயே இருக்கறாங்க…
பிரணாப்: ஏதோ பேருக்கு போர் நிறுத்தம் அறிவியுங்களேன்.
ராஜபக்‌ஷே: அதெல்லாம் பண்ணா சரத்பொன்சேகா என்னை அடிப்பாரு. ம்ஹும் மாட்டேன்.
பிரணாப்: ஃப்ளைட்லாம் ஏறி வந்திருக்கேன். ஏதாவது பார்த்துச் செய்யுங்க!
ராஜபக்‌ஷே: ம்ம்ம்… உங்களுக்கு ஆறுதலா ஒண்ணு பண்றேன் பிராணாப்ஜி! உங்க ஊர் கிரிக்கெட் பசங்க இங்க வந்திருக்காங்க. அவங்க வேணா 5-ல நாலு மேட்ச் ஜெயிச்சுட்டு போகட்டும். அவ்ளோதான் என்னால முடியும். பாகிஸ்தான் அதிபர் வேற பேசறேன்னு சொல்லியிருக்காரு… பார்த்துக்கோங்கஜி.
(சிறிது நேரம் சிந்திக்கிறார். பிறகு இந்தியாவில் யாரிடமோ போனில் பேசுகிறார்.)
பிரணாப்: சரி பக்‌ஷேஜி… ஆனா, ஒரு கண்டிஷன். 4 மேட்ச் அவங்க வரிசையா ஜெயிக்கணும். அப்பதான் எங்க ஆளுங்க நியூஸ் சேனல் பார்க்கறத விட்டுட்டு கிரிக்கெட் பார்ப்பாங்க. கலைஞர் காலேஜுக்கெல்லாம் லீவு விட்டுட்டாரு!
ராஜபக்‌ஷே: சரி சரி… இஅலங்கை டீ-யை குடிச்சிட்டுக் கிளம்புங்கஜி. நாங்க இன்னும் 400 குண்டு போடணும்.

வணக்கம் தமிழ் உலகம்!

பிப்ரவரி 9, 2009

வலை உலகில் நானும்! படியுங்கள்… ஊக்குவியுங்கள்…

நன்றியுடன்

கலைடாஸ்கோப்